தமிழகத்தில் அதிர்ச்சி..! ஆட்டோவில் சிக்கி 2 வயது குழந்தை பலி...!

ராமநாதபுரத்தில் ஆட்டோவில் சிக்கி, இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்னக்கடை பகுதியை சேர்ந்த இப்ராஹிம் என்பவரின் 2 வயது பெண் குழந்தை வீட்டிலிருந்து திடீரென சாலைக்கு ஓடிவந்தபோது ஆட்டோ சக்கரத்தில் சிக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த சிறுமியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்த கொடூர விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.