1. Home
  2. தமிழ்நாடு

பொள்ளாச்சியில் அதிர்ச்சி..! கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை..!

Q

பொள்ளாச்சி அடுத்துள்ள கிராம பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. சம்பவத்தன்று அவர் வீட்டில் தனியாக இருந்தார். அவரது பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர், மாணவியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றார். அலறலை கேட்ட அங்குள்ளோர் உடனடியாக அங்கே சென்றனர். அப்போது ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து கிடப்பதை கண்டனர்.

மாணவியை மீட்ட அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியில் உயிர் பிரிந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து பொள்ளாச்சி காவல் உதவி ஆணையர் சிருஷ்டி சிங் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். தப்பிய மர்ம நபர் யார் என்பது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like