திண்டுக்கல்லில் அதிர்ச்சி..! அங்கன்வாடி 2.5 வயது குழந்தைக்கு கழுத்தில் சூடு..!

திண்டுக்கல் அருகே உள்ளது சுரைக்காய்பட்டி. இங்குள்ள அங்கன்வாடிக்கு ராஜபாண்டி என்பவர் தனது இரண்டரை வயது குழந்தையை தினமும் அனுப்பி வந்தார்.
இந்நிலையில் அங்கன்வாடி உதவியாளர் செல்லம்மாள் என்பவர் கரண்டியால் நெருப்பில் சுட்டு அதை குழந்தையின் கழுத்தில் சூடு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த ராஜபாண்டி இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அங்கன்வாடி உதவியாளர் செல்லம்மாளுக்கு எதிராக கன்னிவாடி போலீஸில் புகார் அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.