1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் அதிர்ச்சி..!திடீரென பேருந்தில் இருந்து குதித்த பெண்..!

Q

கேரளாவை சேர்ந்தவர்கள் மருதன்- மஞ்சு தம்பதியினர்.

இவர்கள் கடந்த 25ம் தேதி பேருந்தில் கோவைக்கு வந்திருந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு இருக்கைகளில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆட்சியர் அலுவலக புதிய நுழைவு வாயில் அருகே பேருந்து வந்த போது திடீரென்று ஓடும் பேருந்தில் இருந்து மஞ்சு குதித்துள்ளார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வேறொரு இருக்கையில் மருதன் அமர்ந்திருந்ததால் மஞ்சு குதித்தது சிறிது நேரம் கழித்தே தெரியவர பின்னர் மருதன் இறங்கி வந்துள்ளார். விழுந்த மஞ்சுவை கண்டு கண்கலங்கிய அவர் உடனடியாக உதவி கேட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் உடனடியாக மஞ்சுவை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவர் மருதன் இறங்கியதாக எண்ணி மஞ்சு பேருந்தில் இருந்து கீழே குதித்தாக கூறப்படும் நிலையில் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like