1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் அதிர்ச்சி..! கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து இளைஞர் தற்கொலை..!

1

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை பாலத்தின் அருகில் நிறுத்திவிட்டு திடீரென பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளார். இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.அப்பகுதியில் பயணம் செய்த மக்கள் உடனடியாக காவல்துறைக்கும்,108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் அந்த இளைஞரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அதன் பின்னர் போக்குவரத்தை சரி செய்தனர்.உயிரிழந்த மாணவர் விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் 6வது பிரதான சாலை பகுதியை சேர்ந்த சாமுவேல் ராஜ்(24) என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டது எந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மும்பையில் இதே போல் ஒருவர் மேம்பாலத்தில் தனது காரை நிறுத்திவிட்டு திடீரென காரில் இருந்து இறங்கி மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இன்று சென்னையில் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like