சென்னையில் அதிர்ச்சி..! பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்கள் சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த செம்பியம் பகுதியில் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்தபோது அவர் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.மறுபக்கம், தப்பியோடிய ஆறு பேரைக் கண்டுபிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். அதேசமயம், தொழில் போட்டி அல்லது முன்விரோதம் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.