1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் அதிர்ச்சி..! +1 வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு..!

Q

சென்னை சைதாப்பேட்டையில் வீடு, வீடாக 11ம் வகுப்பு மாணவர் ஒருவர் தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வந்துள்ளார். இன்று காலை வழக்கம் போல் அம்மாணவர் தண்ணீர் கேனை இறக்கி வைத்துக் கொண்டு இருக்கும் போது மர்ம கும்பல் அங்கு வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக மாணவரை வெட்டினர். மொத்தம் 10 இடங்களில் அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
என்ன காரணத்திற்காக இந்த செயல் நடந்தது, அரிவாளால் வெட்டி விட்டு தப்பிய மர்ம கும்பல் யார் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Trending News

Latest News

You May Like