பீஹாரில் அதிர்ச்சி..! கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி..!

பீஹாரில் கடந்த 2016ம் ஆண்டு முதல் மதுவை விற்கவும், குடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இதுவரையில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு சிவான் மற்றும் சரண் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்தவர்கள், உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். முதலில் பலி எண்ணிக்கை 6 ஆக இருந்த நிலையில், தற்போது 20ஐ எட்டியுள்ளது. பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து சிவான் மாவட்ட மாஜிஸ்திரேட் முகுல் குமார் குப்தா, தகவல் அறிந்தவுடன் மேஹார், அவ்ரியா பஞ்சாயத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.