பெங்களூரில் அதிர்ச்சி..! இன்போசிஸ் கழிவறையில் ரகசிய கேமரா..!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கழிவறையில் ரகசிய கேமரா இருப்பதை பெண் ஊழியர் ஒருவர் பார்த்து அதிர்ந்தார். இது தொடர்பான விசாரணையில், அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஆந்திராவை சேர்ந்த ஸ்வப்னில் நாகேஷ் மாலி என்பவர் ரகசிய கேமரா வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து, எலக்ட்ரானிக் சிட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இன்போசிஸில் பணிபுரியும் ஒரு பெண் அளித்த புகாரில், தான் பயன்படுத்திய கழிப்பறை அறைக்கு அருகிலுள்ள அறையில் சந்தேகத்திற்கிடமான ஒரு அசைவை கண்டதாகவும், அப்போது ஒரு நபர் தன்னை படமெடுத்து கொண்டிருந்ததை கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உடனடியாக மற்ற ஊழியர்கள் உதவியுடன் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து அவரது மொபைல் போனை சோதனை செய்தபோது ரகசிய வீடியோ காட்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதன்பின் அந்த நபரை காவல்துறையில் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தபோது, ‘அந்த நபர் அந்த பெண் ஊழியர் மட்டுமின்றி ரகசியமாக மேலும் பல பெண்களைப் படமெடுத்தாரா என்பதை நாங்கள் விசாரித்து வருகிறோம்" என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.