1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! இனி செல்போன் இருந்தால் தான் கேஸ் சிலிண்டர்!

அதிர்ச்சி! இனி செல்போன் இருந்தால் தான் கேஸ் சிலிண்டர்!


வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல், ஓடிபி இருந்தால் தான் கேஸ் சிலிண்டர்களைப் பெற முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக முடிவு செய்துள்ளன.

நாட்டில் உள்ள பெரும்பாலான வீடுகளில் உணவு சமைப்பதற்கு தற்போது எரிவாயு சிலிண்டர்களையே பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா முழுமைக்கும் கடந்த 2015-ம் ஆண்டில் 56 சதவீதமாக இருந்த எண்ணிக்கை தற்போது, 85 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதாக ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.

நாடு முழுமைக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் உள்ளிட்ட அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் சமையல் மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்து வருகின்றன.

அதிர்ச்சி! இனி செல்போன் இருந்தால் தான் கேஸ் சிலிண்டர்!

இந்நிலையில், நவம்பர் மாதம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறும் முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிலிண்டரை முன்பதிவு செய்த பின்னர், பதிவு செய்யப்பட்ட செல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த ஓடிபி-யை சிலிண்டர் வழங்கும் போது, டெலிவரிபாயிடம் காண்பிக்க வேண்டும். அப்போது தான் சிலிண்டர் கிடைக்கும். மாறாக, ஓடிபியை காண்பிக்கவில்லை எனில் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்காது.

சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவதற்காக, கேஸ் ஏஜென்ஸி நிறுவனத்தில் வாடிக்கையாளரின் செல் போன் எண் பதிவு செய்யப்படவில்லை என்றாலோ அல்லது செல் எண் மாற்றப்பட்டாலோ அதை விநியோகம் செய்யும் போதே புதுபிக்கமுடியும்.

இதற்காக டெலிவரி பையனுக்கு ஒரு செயலி வழங்கப்பட்டுள்ளது. அந்த செயலி உதவியுடன் டெலிவரிபாய், வாடிக்கையாளர்களின் செல் எண் மாற்றுவது உள்ளிட்ட சேவைகளை எளிதாக பெறமுடியும். அதன்பிறகு அந்த எண்ணில் இருந்து ஓடிபியை உருவாக்க முடியும். இந்த புதிய நடைமுறையை முதலில் நூறு பெருநகரங்களில் செயல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனைத் தொடர்ந்து, நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டம் இரண்டு பெரு நகரங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வணிக ரீதியிலான சிலிண்டர்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like