1. Home
  2. தமிழ்நாடு

மதுபிரியர்களுக்கு ஷாக்..! மதுபானங்கள் விலை உயர்வு..!

Q

தமிழக அரசை பொறுத்தவரை மதுபானம் விலையானது அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. மறுபுறம் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைகளையும், போராட்டங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் மதுபான விலைகள் கணிசமாக குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்தார். அதன்படி தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தும் சொன்ன படியே முதல்வர் சந்திரபாபு நாயுடு மதுபான விலைகளை அதிரடியாக குறைத்தார். அதாவது ரூ.120க்கு விற்கப்பட்ட மதுபாட்டில்களை ரூ.99ஆக குறைக்கப்பட்டது. குறிப்பாக எந்த பிராண்டாக இருந்தாலும் 180 மி.லி மதுவை 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

இந்நிலையில் ஆந்திராவில் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்களை தவிர்த்து மற்ற மதுபானங்களின் விலையை கலால் துறை 15 சதவீதம் உயர்த்தியுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று (பிப்.11) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதேபோல் தெலங்கானா மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் பீர் வகைகள் மீது 15 சதவீத விலையை உயர்த்தியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா அரசுகளின் இந்த முடிவு மதுபிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Trending News

Latest News

You May Like