1. Home
  2. தமிழ்நாடு

அசைவ பிரியர்களுக்கு ஷாக்..! இன்று இறைச்சி கடைகள் இயங்காது..!

1

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் இன்று அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.

இதேபோல், ஜெயின் கோயில்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டு, இறைச்சி விற்பனை செய்யப்படுவதும் தடை செய்யப்பட்டு உள்ளது. எனவே, இந்த உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதேபோல் இன்று டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மஹாவீர் ஜெயந்தி தினம் அன்றும், மே தினம் (1ஆம் தேதி) அன்றும், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் கண்டிப்பாக மூடப்பட்டு, மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிக்கப்படுகிறது. மேலும், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளைச் சார்ந்த பார்கள், கிளப்களைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் என அனைத்தும் மஹாவீர் ஜெயந்தி தினம் மற்றும் மே தினம் ஆகிய நாட்களில் கண்டிப்பாக மூடப்பட்டு, மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. தவறினால், மதுபானம் விற்பனை விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். 

Trending News

Latest News

You May Like