நகைபிரியர்களுக்கு ஷாக்..! தங்கம் விலை இன்னும் ரூ.71 ஆயிரத்தை குறையவில்லை..!

கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை, மே மாதத்தில் சற்று சரிவை சந்தித்தது. உலகப் பொருளாதார சூழல்களும், பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட மாற்றங்களும், தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி இந்த மே மாதத்தில் குறையக் காரணமாக அமைந்தது.
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.71,160க்கு விற்பனையானது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.200 அதிகரித்து ரூ.71,360க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.8,920க்கு விற்பனையாகி வருகிறது.
தொடர்ந்து ஏற்ற, இறக்கமாக காணப்பட்டு வந்தாலும், ஒரு மாதம் முடிந்த நிலையிலும், தங்கம் விலை இன்னும் ரூ.71 ஆயிரத்தை விட்டு குறையவில்லை. இது திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்கு நகை வாங்க விரும்புபவர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.