நகைப்பிரியர்களுக்கு ஷாக்! மீண்டும் ஜெட் வேகத்தில் செல்லும் தங்கம் விலை...!

இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப, தங்கம் விலை அவ்வப்போது மாறி வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது, போர் சூழல் போன்றவற்றால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே விர்ரென அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம்.
கடந்த 4-ந்தேதியில் இருந்து விலை அதிகரித்து காணப்பட்டது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.64.160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,065-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,520-க்கும் விற்பனையாகிறது.
நேற்று வெள்ளி விலை சற்று குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,160
10-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,400
09-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320
08-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,320
07-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,240