அதிர்ச்சி! பிரபல சீரியல் நடிகை திடீர் மரணம்!!
பிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீரென உயிரிழந்ததை அடுத்து திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இனிய இரு மலர்கள், இரு மலர்கள் போன்ற தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை ஜரினா ரோஷன் கான். அவர் கும் கும் பாக்யா என்ற இந்தி படத்திலும் நடித்திருக்கிறார். ஜரினா ரோஷன் கான் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பாக ஸ்டண்ட் உமனாக இருந்தவர்.
இந்நிலையில் ஜரினா ரோஷன் கான் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 54. இந்த தகவலை சீரியல் ஹீரோ ஷபீர் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்.
ஜரினா கான் மறைவுக்கு இந்தி டிவி சீரியல் நடிகைகள் ஸ்ரிதி மற்றும் சபிர் அஹுலுவாலா போன்ற பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
newstm.in