1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி.. மளிகைக் கடையில் போதை சாக்லேட்.. 33 கிலோ பறிமுதல்: உரிமையாளர் கைது..!

அதிர்ச்சி.. மளிகைக் கடையில் போதை சாக்லேட்.. 33 கிலோ பறிமுதல்: உரிமையாளர் கைது..!


திருப்பூரில், மளிகைக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 6,670 போதை சாக்லேட்களை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளரை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே முதலிபாளையம் - சிட்கோ பகுதியில் குட்கா, போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று, சிட்கோ பகுதியில் உள்ள மளிகைக் கடையில் போதை சாக்லேட் விற்பனையை கண்டறிந்தனர். அங்கு சென்று ஒரு கடையில் சோதனை செய்ததில், குட்கா மற்றும் போதை சாக்லேட்கள் இருந்தன.

இது தொடர்பாக கடையின் உரிமையாளர் சொக்கலிங்கம் (55) என்பவரை ஊத்துக்குளி போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்து 33 கிலோ எடையுள்ள 6,670 போதை சாக்லேட் மற்றும் 67 கிலோ குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

இந்த சாக்லேட், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தயாரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

Trending News

Latest News

You May Like