அதிர்ச்சி! இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழகங்கள்! செல்லாத சான்றிதழ்கள்! கேள்விக்குறியான மாணவர்களின் எதிர்காலம்!

X

இந்தியா முழுவதுமாக 24 போலி பல்கலைக் கழகங்கள் செயல்படுவதாக பல்கலைக் கழக மானியக்குழு தெரிவித்துள்ளது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி செயல்பட்டு வரும் இந்த 24 பல்கலைக் கழகங்களுக்கும், பல்கலைக் கழக மானியக் குழுவிற்கும் எந்தவிதமான சம்பந்தம் இல்லை என்றும், இந்த பல்கலைக் கழகங்களில் படித்து மாணவர்கள் பெறும் பட்டங்கள் எதுவுமே செல்லாது எனவும் பல்கலைக் கழக மானியக்குழு விளக்கம் அளித்துள்ளது.

டெல்லியில் இது போன்று மொத்தம் 7 போலி பல்கலைக் கழகங்கம் இருப்பதாகவும் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக்கழகமும், மேற்கு வங்கம், ஒடிசாவில் இது போன்று 2 போலி பல்கலைக் கழகங்களும் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுளது.

அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் இது போன்று 8 போலி பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருவதாக பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பல்கலைக்கழகங்களில் படித்து, தேர்வெழுதி பெற்ற பட்டங்களும், சான்றிதழ்களும் செல்லாது என்று பல்கலைக்கழக மானிய குழு அறிவித்திருப்பது இந்த பல்கலைக்கழகங்களில் பயின்ற மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

Next Story
Share it