1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! காதலனின் பிறப்புறுப்பை துண்டித்த யோகா டீச்சர்!!

அதிர்ச்சி! காதலனின் பிறப்புறுப்பை துண்டித்த யோகா டீச்சர்!!


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனின் பிறப்புறுப்பை காதலி துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்பூரை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் 35 வயதான யோகா ஆசிரியை அறிமுகமாகியுள்ளார். இருவரும் ஒரே துறையில் பல ஆண்டுகளாக ஒன்றாக பணியாற்றி வருகின்றனர்.

அந்தப்பெண் திருமணமாகி கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருக்கமாகியுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்தப்பெண் இளைஞரை போனில் அழைத்து காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இருவரும் சாப்பிட்டுவிட்டு இளைஞரின் வீட்டிற்கு சென்றனர். நள்ளிரவில் இடுப்புக்கு கீழ் வலியாக இருக்கிறதே என்று இளைஞர் விழித்துள்ளார். படுக்கை முழுவதும் ரத்தக்கறையாக இருந்துள்ளது.

நேரம் செல்ல செல்ல வலி அதிகரித்துள்ளது. பின்னர் தான் தன்னுடைய பிறப்புறுப்பு அறுப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தன்னுடன் இருந்த பெண்ணை தேடியுள்ளார். ஆனால் அவர் வீட்டில் இல்லை.

இதனையடுத்து போனை எடுத்து அந்தப்பெண்ணை அழைத்தார். போனை எடுத்த பெண் என்னை மன்னித்துவிடு மன்னித்துவிடு எனக் கூறியுள்ளார். பிறகு தான் தன்னுடைய நிலைக்கு இந்தப்பெண் தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

அதிர்ச்சி! காதலனின் பிறப்புறுப்பை துண்டித்த யோகா டீச்சர்!!

இதனையடுத்து அவரது வீட்டுக்கு வந்த அந்தப்பெண் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சிகிச்சை முடிந்து வந்த இளைஞர் பெண் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

முதற்கட்ட விசாரணையில், இளைஞரும் அந்தப்பெண்ணும் மிகவும் நெருக்கமாக பழகிவந்துள்ளனர். இந்நிலையில் இளைஞர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள போவதாக கூறியுள்ளார். தன்னை திருமணம் செய்துக்கொள்ள அந்தப்பெண் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதற்கு இளைஞர் மறுக்கவே அந்தப்பெண் இவ்வாறு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணை தேடி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like