அதிர்ச்சி..! சென்னை பிரபல மாலில் நூலிழையில் உயிர் தப்பிய வெங்கடேஷ் பட் மகள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலருக்கும் ஃபேவரைட் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் வாழ்க்கையில் அடுத்தடுத்த வெற்றிகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவர்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் , பிரபல சமையல் கலைவல்லுனரும் பிரபல நிகழ்ச்சியான ‘குக்கு வித் கோமாளி’ யின் நடுவருமான வெங்கடேஷ் பட் அவர்கள் தனது குடும்பத்துடன் சென்னை ஃபீனிக்ஸ் மால் சென்றுள்ளார்.அவர் தன் மகளுடன் எஸ்கலேட்டரில் பயணம் செய்யும் போது திடீரென அவர் மகளின் காலணி இழுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதை பார்த்து அதிர்ச்சியான வெங்கடேஷ் பட் உடனடியாக தன் மகளின் காலை இழுத்ததால் பெரும் விபத்தில் இருந்து தப்பித்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.மேலும் இது போன்ற இடத்தில பெற்றோர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
சென்னையில் உள்ள பெரிய மாலில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்க இருந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது