அதிர்ச்சி..!வடிகால்வாயில் விழுந்த 3 வயது குழந்தை..!

துரைப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் உதயன், மீனா தம்பதியினருக்கு, 3 வயதில் பிரதிக்ஷா என்ற குழந்தை உள்ளது. இக்குழந்தை வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தது.
அப்போது எவ்வித பாதுகாப்பு வேலிகளும் இல்லாமல் அமைக்கப்படும் மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்த குழந்தை உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் பிரதிஷாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பாதுகாப்பு வேலிகளோ, உபகரணங்களோ இல்லாமல் வடிகால் கால்வாய் பணிகளை மேற்கொள்வதால் தான் விபத்து நேரிடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.