அதிர்ச்சி..! இவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு கிடையாது..!

தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது..
அந்த ஒதுக்கீட்டின் கீழ் தமிழகத்தில் எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை இடங்களைப் பெற்றவா்கள், தங்களது படிப்பை நிறைவு செய்த பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது விதி.அதற்காக அவா்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், வழக்கமான அரசு மருத்துவா்களுக்கு மகப்பேறு காலத்தில் அளிக்கப்படும் ஈட்டிய விடுப்பு சலுகைகளை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று அரசு சாரா ஒப்பந்த மருத்துவா்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி இதுதொடா்பாக அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:முதுநிலை மருத்துவம் பயின்ற ஒப்பந்த மருத்துவா்களின் பணிக் காலம் தற்காலிகமானது. அவா்கள் அரசு ஊழியா்கள் அல்ல. எனவே, அவா்கள் தங்களது பணிக் காலத்தில் எடுக்கும் மகப்பேறு விடுப்புகள் பணிக்கு வராத நாள்களாகவே கருதப்படும். இவர்கள் பிரசவத்திற்கு பிறகு அந்த விடுப்பை பணி செய்து ஈடு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.