1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி..! சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் புறப்பட்ட விண்கலம்!

Q

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சுனிதா வில்லியம்ஸ், 58, புட்ச் வில்மோர், 61, ஆகியோர் கடந்த ஜூன் 5ல் சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். ஜூன் 7ல் பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றடைந்தனர்.
தொழில்நுட்ப கோளாறு
அங்கிருந்து ஆய்வு நடத்திவிட்டு பூமிக்கு திரும்பும் நிலையில் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட கோளாறால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 8 நாள் பயணம் 8 மாதமாக நீட்டிக்கப்பட்டது.
பிப்ரவரியில் தான் தெரியும்!
தற்போது 90 நாட்களுக்கு மேலாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளி மையத்தில் தவித்து வருகின்றனர். அவர்களை அழைத்து வர நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாடியது. அந்நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் எனப்படும் விண்கலன் உதவியுடன் அவர்களை அழைத்து வர உள்ளனர். 4 வீரர்கள் குழுவுடன் விண்வெளிக்கு செல்லும் இந்த டிராகன் விண்கலன் அடுத்தாண்டு பிப்ரவரியில் தான் பூமிக்கு திரும்பும் என தகவல் வெளியானது.
பூமி திரும்பியது ஸ்டார்லைனர்!
இந்நிலையில், தற்போது சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை விண்வெளிக்கு ஏற்றிச் சென்ற அந்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலன், ஆளே இல்லாமல் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இது மெக்ஸிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் விண்வெளி துறைமுகத்தில் தரையிறங்க உள்ளது. ஸ்டார்லைனர் விண்கலம் பூமியில் தரையிறங்கியதும் எப்படி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என்று ஆய்வு செய்யப்படும்.
நீண்ட காலமாக போராடியும் ஏன் பிரச்னையை சரி செய்ய முடியவில்லை என்பது குறித்து போயிங் நிறுவனம் ஆய்வு நடத்தும். இப்படி திட்டம் சொதப்பியதால், விண்வெளிக்கு வீரர்களை தொடர்ந்து அனுப்பும் நாசா திட்டத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல, விண்வெளித்துறையில் தடம் பதிக்க ஆசைப்பட்ட போயிங் விமான நிறுவனத்துக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like