1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி..! பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய்..?

1

பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் மிடில்டன். இவர்களுக்கு 2011-ம் ஆண்டு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்த நிலையில் அரண்மனையில் வசித்து வரும் இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பிரிட்டன் மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவரது அரச பணிகளை இளவரசர் வில்லியம்ஸ் கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் இளவரசி கேத் மிடில்டனை காணவில்லை என இங்கிலாந்தில் புதிய பரபரப்பு கிளம்பியது. அதாவது ஜனவரி மாதம் முதல் கேத் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அரண்மனை செய்தி வெளியிட்டிருந்தது. அந்த செய்திக் குறிப்பில், “இளவரசி கேத்துக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அவர் ஈஸ்டர் பண்டிகை வரை அதாவது மார்ச் 31-ம் தேதி வரை அரச கடமைகளை செய்ய மாட்டார். அவருக்கு ஓய்வு தேவை” என தெரிவித்திருந்தது.

Kate MIddleton

எனினும் பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கேத், பொதுமக்களுடன் நெருக்கம் காட்டி வந்தார். ஆனால் அண்மையில் அதிகளவில் பொது நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்ளவே இல்லை. இதனால் அவரது உடல்நிலை மோசமாகிவிட்டதாக ஸ்பானிஷ் செய்தியாளர் ஒருவர் கிளப்பிவிட்டுவிட்டார். கேத் கோமாவுக்கு சென்றுவிட்டார். இதற்கு தன்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன என்றெல்லாம் அந்த செய்தியாளர் பரபரப்பை கிளப்பினார். இதை அரண்மனை வட்டாரங்கள் மறுத்தன. கேத் மிடில்டன் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் பிரியப்படுவார். மூன்று குழந்தைகளை கொண்டுள்ள கேத், தனது பிரசவத்திற்கு பிறகு குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் வெளியே வந்து போஸ் கொடுத்தார்.

அப்படிப்பட்டவர் வயிற்று வலி சிகிச்சைக்கு முன்பும் பின்பும் புகைப்படத்தை வெளியிடாதது ஏன், இதையெல்லாம் நம்ப முடிகிறதா என கேள்வி எழுப்பி ஒரு எக்ஸ் பதிவு வைரலானது. மேலும் கேத் மிடில்டனை காணவில்லை என்றே லண்டன் மக்கள் சில சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதனால் அரண்மனையில் சர்ச்சை நிலவியது.



இந்த நிலையில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை உறுதி செய்து வீடியோ மூலம் பேசியுள்ளார். அதில் அவர் "எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ஆரம்ப கட்ட சிகிச்சையை மேற்கொண்டு வருகிறோம். எங்கள் குடும்ப நலன் கருதி நாங்கள் இந்த விவரங்களை வெளியே சொல்லாமல் இருந்தோம். எனக்கு புற்றுநோய் பாதிப்பு என தெரிந்தவுடன் எனக்கும் வில்லியம்ஸுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்தேன். அதிலிருந்து மீண்டு வர எனக்கு காலம் பிடித்தது.

இந்த கீமோ சிகிச்சையை அதே மருத்துவமனையில் தொடங்கியுள்ளேன். எங்கள் குழந்தைகளுக்கும் புரியும் கூறிவிட்டோம். தற்போது நான் நலமாக இருக்கிறேன். இதிலிருந்து மீண்டும் வர உதவும் விஷயங்களில் நான் கவனம் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு நாளும் மனதளவிலும் உடல் அளவிலும் வலுவாக உள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்கு என்ன புற்றுநோய் என தெரியவில்லை.

Trending News

Latest News

You May Like