1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி..! 'பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்துவின் தந்தை திடீர் தற்கொலை..!

Q

 ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதலான பல சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் சித்ரா. சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்து டிவியில் கலக்கிக் கொண்டிருந்த இவர் கடந்த கடந்த 2020 ம் ஆண்டு இதே டிசம்பர் மாதம் நசரத் பேட்டையில் ஹோட்டல் ஒன்றில் திடீர் மரணமடைந்தார்.

தற்கொலை செய்து கொண்டதாகவும் இவரது மரணத்துக்குக் காரணம் இவரது கணவர் ஹேமந்த்தான் எனவும் சித்ராவின் பெற்றோர் குற்றம் சாட்டினர். ஹேமந்தும் கைது செய்யப்பட்டார். பிறகு வழக்கு நடந்து முடிவில் ஹேமந்த் குற்றவாளி இல்லை எனத் தீர்ப்பு வந்தது.

தீர்ப்பை எதிர்த்து சித்ராவின் பெற்றோர் மேல்முறையீடு செய்திருந்தனர்.

அந்த வழக்கு நிலுவையில் இருக்கிற நிலையில், இன்று அதிகாலை சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டில் அவரது அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கமால் இருந்ததால், கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது காமராஜ் தூக்கில் சடலமாக தொங்கினார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து திருவான்மியூர் போலீசார் விசாரணை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2020 டிசம்பரில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது அவரது தந்தையும் தற்கொலை கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like