அதிர்ச்சி! பாகிஸ்தான் சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு கொரோனா!!

 | 

பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மூன்று டி20, 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி கடந்த 9ஆம் தேதி பாகிஸ்தான் சென்றது. 2018ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறை

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியினர் விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது இருபது ஓவர் போட்டி கராச்சியில் தொடங்குகிறது.

Cottrell 1

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள ஒருவருக்கும் ராஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், கைல் மேயர்ஸ் ஆகிய மூன்று வீரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். பாதிக்கப்பட்வர்களுக்கு அறிகுறி ஏதும் இல்லை. ஓட்டல் அறையில் அறையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது மருத்துவரின் மேற்பார்வையில் உள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP