அதிர்ச்சி! பிரபல ஷாம்பூவில் புற்றுநோய் ரசாயனம்!!
அதிர்ச்சி! பிரபல ஷாம்பூவில் புற்றுநோய் ரசாயனம்!!

புற்றுநோயை உண்டாக்கும் ஏஜென்ட் பென்சீன் இருப்பதால் ப்ராக்டர் & கேம்பிள் நிறுவனம் (P&G) அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட முடி பராமரிப்பு தயாரிப்புகளை திரும்பப் பெற்றுள்ளது.
திரும்பப் பெறப்பட்ட தயாரிப்புகளில் பான்டீன், ஹெர்பல் எசன்ஸ், ஓல்ட் ஸ்பைஸ் மற்றும் பிற பிராண்டுகளின் உலர் கண்டிஷனர் மற்றும் உலர் ஷாம்பு ஸ்ப்ரேக்கள் அடங்கும். அந்த தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் பொருளாக பென்சீன் இருக்கலாம் என்று எச்சரித்துள்ளது.
ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக பி&ஜி நிறுவனம் பொருட்களை திரும்பப்பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் P&G ஒரு டஜன் ஓல்ட் ஸ்பைஸ் மற்றும் சீக்ரெட்-பிராண்டட் ஏரோசல் டியோடரண்டுகள் மற்றும் ஸ்ப்ரேக்களுக்கு இதேபோல் திரும்பப்பெற்றது.
பென்சீனை உள்ளிழுப்பதன் உயிருக்கு ஆபத்தான இரத்தக் கோளாறுகள் உள்ளிட்ட புற்றுநோய்களை ஏற்படுத்தும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. திரும்பப் பெற்றப்பட்ட பொருட்களை அலமாரிகளில் இருந்து அகற்றுமாறு சில்லறை விற்பனையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலையில், ஜான்சன் & ஜான்சன் சில ஸ்ப்ரே-ஆன் நியூட்ரோஜெனா மற்றும் ஏவினோ சன்ஸ்கிரீன்கள் தயாரிப்புகளில் குறைந்த அளவு புற்றுநோயைக் கண்டறிந்த பிறகு திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
newstm.in