அதிர்ச்சி! 400 கிலோ மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்!!

அதிர்ச்சி! 400 கிலோ மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்!!

அதிர்ச்சி! 400 கிலோ மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்!!
X

குஜராத்தில் 400 கோடி மதிப்பு போதைப்பொருளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

குஜராத் கடலோர காவல் படையினரும், குஜராத் பயங்கரவாதத் தடுப்புப்படையினரும் இணைந்து கடல் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தான் மீன்பிடி படகு ஒன்று இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளதை கவனித்தனர்.

இதையடுத்து படகை தடுத்து நிறுத்திய கடலோர காவல்படையினர், பயங்கரவாத தடுப்புபடையினர் அந்த படகில் சோதனை மேற்கொண்டனர். அந்த படகில் பாகிஸ்தானை சேர்ந்த 6 பேர் இருந்தனர்.

அவர்கள் மூட்டை மூட்டையாக போதைபொருளை படகில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடலோர பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் 77 கிலோ எடையுள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

guj drug 1

இது தொடர்பாக 6 பேரையும் கடலோர பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். சர்வதேச சந்தை மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மதிப்பு 400 கோடி என்று தெரியவந்துள்ளது.

இதுபோன்று குஜராஜ் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ரூ.15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2,988 கிலோ ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it