1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! இருமல் மருந்து சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு!!

அதிர்ச்சி! இருமல் மருந்து சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு!!


டெல்லியில் மோஹல்லா மருத்துவமனையில், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டெக்ஸ்ட்ரோமெதார்போன் என்ற இருமல் மருந்தைச் சாப்பிட்டுதான் 3 குழந்தைகள் இறந்ததாகவும், அந்த மருந்தை டெல்லி மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்வதை நிறுத்த வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR) கேட்டுக்கொண்டுள்ளது.

இருமல் மருந்தைச் சாப்பிட்டுக் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் என்சிபிசிஆர் டெல்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதிர்ச்சி! இருமல் மருந்து சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு!!

இருமலுக்காக டெக்ஸ்ட்ரோமெதார்போன் மருந்து பரவலாகப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், அதிகமாக எடுக்கும்போது, மயக்கம், வாந்தி, மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை போன்றவை ஏற்படும்.

டெல்லியில் கடந்த ஜூன் 29 முதல் நவம்பர் 21ஆம் தேதி வரை டெக்ஸ்ட்ரோமெதார்போன் மருந்தைச் சாப்பிட்டு விஷமாக மாறிய 16 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். 3 குழந்தைகளும் சுவாசக்குழாய் திடீர் செயலிழப்பால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அம்மருத்துவமனையை சேர்ந்த 3 மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like