1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி..! 11.5 கோடி பான் அட்டைகள் முடக்கம்..! இனி லோன் எடுக்க முடியாது! பணம் போட முடியாது!

1

நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முதலில் 1 வருடம் அவகாசம். பின்னர் கூடுதலாக 6 மாதம் அவகாசம். அதன்பின் கடந்த மார்ச் வரை 500 ரூபாய் அபராதத்துடன் அவகாசம், பின்னர் ஜூன் இறுதிவரை 1000 ரூபாய் அபராதத்துடன் அவகாசம் வழங்கப்பட்டது.

பான்-ஆதார் இணைப்புக்கான கெடு 2023, ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 57.25 கோடி பேர்களின் பான் அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் காலக்கெடுவை பல முறை நீட்டித்தும், பான் அட்டைகளை ஆதாருடன் இணைக்காத 11.50 கோடி பான் அட்டைகள் முடக்கப்பட்டுவிட்டதாகவும் ஐக்கிய நேரடி வரி விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த முடக்கப்பட்ட பான் அட்டைகளை நிரந்தரமாக பயன்படுத்த முடியாது.

நிரந்தரக் கணக்கு எண் எனப்படும் பான் எண்ணை வருமான வரித்துறை வழங்குகிறது. நாட்டில் வருமானம் பெரும் அனைவருக்கும் இந்த எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வரி ஏய்ப்பு, மோசடி பணப் பரிவர்த்தனை போன்றவற்றைத் தவிர்க்க இந்த எண், ஆதாருடன் இணைக்கப்பட்டது.

பான் அட்டை ஆதார் அட்டையை இணைக்காதவர்களுக்கு உங்கள் பான் செயலற்றதாகி விடும். அதாவது அந்த எண் டீ ஆக்டிவேட் ஆகிவிடும். அப்படி ஆகும் பட்சத்தில் நீங்கள் பணம் அனுப்புவது தொடங்கி லோன் எடுப்பது, வருமான வரி தாக்கல் செய்வது வரை எல்லாம் சிக்கலாகும். சிக்கலாகும் என்பதை விட மொத்தமாக இந்த பணிகளை செய்வது இயலாத காரியம்.

இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படுமா, வங்கி கணக்கு முடங்குமா என்று இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இது தொடர்பாக ஆர்பிஐ விரைவில் விளக்கம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு வட்டார தகவல்களின்படி இனிமேல் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like