1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி..!! டெங்கு அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

Q

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள தெண்ணீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த புவியரசன் என்பவரின் 9 வயது மகன் சக்தி சரவணன், அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்த சிறுவன், ஒரு வாரத்திற்கு மேலாக காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை கடந்த அக்டோபர் 11- ஆம் தேதி அன்று சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர்.
அங்கு சிறுவனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு டெங்கு அறிகுறிகள் இருந்தது என்றும், ஆனால் டெங்கு காய்ச்சல் உறுதிச் செய்யப்படவில்லை என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஒருவாரம் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த சிறுவன், சிகிச்சைப் பலனின்றி இன்று (அக்.17) உயிரிழந்தார். டெங்கு அறிகுறியுடன் சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, அந்த பகுதியில் நோய்த்தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like