சிவ்தாஸ் மீனாவுக்கு புது பொறுப்பு..தமிழகத்தின் அடுத்த தலைமை செயலாளர் யார்?
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் வெ இறையண்பு தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இவர் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தமிழக தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா செயல்பட்டு வருகிறார். ஓராண்டுக்கும் மேலாக அவர் அந்த பொறுப்பில் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் சிவ்தாஸ் மீனாவுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதனால் தமிழகத்தின் அடுத்த தலைமை செயலாளர் யார்? என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிவ்தாஸ் மீனா தமிழகத்தின் 49வது தலைமை செயலாளராக செயல்பட்டு வருகிறார். அடுத்து வருபவர் 50 வது தலைமை செயலாளராவார். இதனாலும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் பார்த்தால் தமிழக தலைமை செயலாளர் பதவிக்கு என் முருகானந்தம் ஐஏஎஸ்ஸின் பெயர் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தான் தமிழகத்தின் அடுத்த தலைமை செயலாளராக நியமனம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. தற்போது என் முருகானந்தம் ஐஏஎஸ் முதல்வர் ஸ்டாலினின் முதன்மை செயலாளராக உள்ளார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலினுடன் நெருக்கமாக உதயசந்திரன் ஐஏஎஸ் செயல்பட்டு வந்தார். அவர் பணி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் உதயசந்திரன் ஐஏஸ் இடத்தை நிரப்பியவர் தான் என் முருகானந்தம். இவர் நிதித்துறை செயலாளராக இருந்த நிலையில் கடந்த ஆண்டு முதல்வரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது