ஆன்மீகம் அறிவோம் : தோல் நோய்களை குணமாக்கும் அற்புத சிவன் கோவில்...!

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற ஒரு சிவன் கோவிலுக்கு சென்றால் எப்படிப்பட்ட தோல் நோயும் குணமாகும் என சொல்லப்படுகிறது. தோல் தொடர்பான வியாதிகள் மட்டுமின்றி சில இதயம் தொடர்பான பிரச்சனைகளும் இந்த கோவிலுக்கு சென்றால் குணமாவதாக சொல்லப்படுகிறது. இங்கு வழிந்து வழிபட்டு சென்றாலே விரைவில் நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இப்படி தேடி வந்து நம்பிக்கையுடன் வழிபடும் பக்தர்களின் நோய்களை எல்லாம் குணமாக்கும் பிரபலமான சிவன் கோவில், கடலூர் மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலாகும். வைத்தியன் என்றால் மருத்துவர் என்று பொருள். ஈஸ்வரன் என்றால் கடவுள் என்று பொருள். அதாவது மருத்துவத்தின் கடவுள் என்பதால் இங்குள்ள இறைவன் வைத்தீஸ்வரன் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். அவரது பெயராலேயே இந்த கோவில் மட்டுமல்ல, ஊரும் வைத்தீஸ்வரன் கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இது நவகிரக தலங்களில் செவ்வாய் பகவானுக்குரிய பரிகார தலமாக உள்ளது. செவ்வாய் கிரகம், இரத்தம் தொடர்பான நோய்களுக்கு காரணமானவர் என்பதால் இந்த கோவில் நோய்களை தீர்க்கும் அற்புத தலமாக விளங்குகிறது.
இக்கோவிலில் உள்ள புனித குளத்திற்கு சித்தாமிர்த தீர்த்தம் என்று பொருள். எவர் ஒருவர் இந்த கோவில் குளத்தில் குளிக்கிறாரோ அவரின் நோய்கள் அனைத்தும் குணமாகும் என்பது நம்பிக்கை. இந்த கோவிலுக்கு சென்று விபூதி வாங்கி சாமிக்க காணிக்கையாக கொடுத்தால் நீண்ட நாள் தீராமல் இருக்கும் நோய்கள், என்ன நோய் என்றே கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் நோய்கள் குணமாவதாக சொல்லப்படுகிறது.