சிவா ப்ரோ நீங்க இப்படி செய்யலாமா ? சிவகார்திகேயனால் ஸ்தம்பித்த சென்னை..!
’அமரன்’ படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான சண்டைக்காட்சி சென்னை பெருங்களத்தூர் மேம்பாலத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ரோப் கட்டிக் கொண்டு சிவகார்த்திகேயன் பாலத்தின் மீது நின்றிருக்கிறார். இதைப்பார்த்த பொதுமக்கள் சிவகார்த்திகேயனைப் பார்க்க அங்குக் குவிந்திருக்கிறார்கள்.
இதனால், அங்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. போக்குவரத்தை சரிசெய்யவும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் போராடி சரி செய்தனர்