1. Home
  2. தமிழ்நாடு

சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராவத்திற்கு 15 நாள் சிறை..!

Sw

மராட்டிய மாநிலம் பயந்தர் முனிசிபல் கார்ப்பரேஷனின் வரம்பிற்குட்பட்ட பொது கழிப்பறைகளை கட்டுவது மற்றும் பராமரிப்பது தொடர்பாக 100 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாகச் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியிருந்தார். எனவே இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த அவதூறு வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

பாஜக தலைவர் கிரித் சவுமியா மனைவி டாக்டர் கிரித் மேத்தா என்பவர் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். தன் மீது அடிப்படை ஆதாரம் இல்லாத முற்றிலும் அவதூறான வகையில், தனக்கும் தனது கணவருக்கும் எதிராகப் பேசியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக அவதூறு வழக்கும் தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில் சஞ்சய் ராவத்திற்கு 15 நாள் சிறை தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Trending News

Latest News

You May Like