1. Home
  2. தமிழ்நாடு

வேட்டி சட்டை பிரச்சனை எதிரொலி : பெங்களூர் ஷாப்பிங் மாலை மூட அரசு உத்தரவு..!

1

பெங்களூரில் ஜிடி மால் என்ற ஒரு வணிக வளாகம் உள்ளது. இங்கு விவசாயியான முதியவர் ஒருவர் தனது மகனுடன் வந்திருந்தார். அங்குள்ள தியேட்டரில் படம் பார்ப்பதற்காக அவருடைய மகன் டிக்கெட்டை முன் பதிவு செய்திருந்தார்.

படம் பார்க்க வந்த போது விவசாயியான முதியவர் வேட்டி சட்டையில் வந்திருந்தார். அப்போது மாலுக்குள் நுழைய முயன்ற முதியவரை பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. அவருடைய மகன் எவ்வளவோ பேசியும் "வேஷ்டி கட்டிவந்தால் மாலுக்குள் அனுமதிக்க முடியாது என்றும் வேட்டியை மாற்றிவிட்டு வேறு உடையில் வந்தால் அனுமதிப்பதாக" அவர்கள் தெரிவித்தனர்.

நீண்ட தூரத்தில் இருந்து பெங்களூர் வந்திருப்பதால் உடனே போய் ஆடையை மாற்றிக் கொண்டு வர முடியாது என அந்த முதியவரும் அவருடைய மகனும் கூறியும் அவர்கள் ஏற்க மறுத்து, அவர்களை மாலை விட்டு வெளியே அனுப்பிவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இந்த சம்பவம் விவசாயிகளுக்கு எதிரானது என கூறி அரசை கடுமையாக சாடினர். இதையடுத்து கன்னட ஆதரவாளர்களும் கன்னட விவசாயிகளும் இந்த சம்பவத்தை கண்டித்து வேஷ்டி அணிந்து மாலுக்குள் நுழையும் போராட்டத்தை நடத்தினர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த மால் ஒரு வாரத்திற்கு செயல்பட கூடாது என கூறி மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like