1. Home
  2. தமிழ்நாடு

ஷிகர் தவான் ஓய்வு அறிவிப்பு..!

1

சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான ஷிகர் தவான், உள்ளூர் மற்றும் உலக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு மூலம் அவர் தெரிவித்தார். அவருக்கு காம்பீர், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

38 வயதான அவர், கடந்த 2010 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய இடது கை தொடக்க ஆட்டக்காரர். 34 டெஸ்ட், 68 டி20 மற்றும் 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தமாக 10,867 ரன்கள் எடுத்துள்ளார். தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியவர். ஐசிசி தொடர்களில் அபாரமாக ஆடி ரன் குவிப்பது இவரது வழக்கம். 222 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 6,769 ரன்கள் எடுத்துள்ளார்.

“வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்வது முக்கியமானது. அதனால் தான் நான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். இந்திய அணிக்காக நீண்ட நாட்கள் விளையாடிய மன நிறைவுடன் விடை பெறுகிறேன். பல மறக்க முடியாத நினைவுகளை என்னுள் கொண்டுள்ளேன்” என தவான் தெரிவித்துள்ளார். சதம் விளாசிய பிறகு தவான் அதனை கொண்டாடுவது தனித்துவமாக இருக்கும். பேட்டை உயர்த்துவதோடு தனது தொடைகளை தட்டி கொண்டாடுவார். சமயங்களில் கேட்ச் பிடிக்கும் போதும் இதனை செய்வார். இந்திய கிரிக்கெட்டின் கப்பர் தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஷிகர் தவானுக்கு இந்திய வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர். சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக் மற்றும் சௌரவ் கங்குலிக்குப் பிறகு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அணியில் ஷிகர் தவான் இடம் பிடித்தார். இந்திய அணிக்காக ஷிகர் தவான் 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெறாமலிருந்த அவர், இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஷிகர் தவானுக்கு இந்திய முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

வீரேந்தர் சேவாக்

மொஹாலியில் தொடக்க ஆட்டக்காரராக எனது இடத்தை நிரப்பியதிலிருந்து இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் மிகவும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளீர்கள். ஓய்வுக்குப் பிறகான உங்களது வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைய எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கௌதம் காம்பீர்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கான உங்களது பயணம் மிகவும் சிறப்பானது. எதிர்கால பயணங்களிலும் உங்களது மகிழ்ச்சி தொடர எனது வாழ்த்துகள்.

ஹார்திக் பாண்டியா

சர்வதேச கிரிக்கெட்டில் உங்களது பயணம் சிறப்பாக அமைந்தது. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரேயாஸ் ஐயர்

வாழ்த்துகள். உங்களது எதிர்கால பயணங்கள் சிறக்க எனது வாழ்த்துகள்.

அனில் கும்ப்ளே

சர்வதேச கிரிக்கெட்டில் உங்களது சிறப்பானதாக அமைந்துள்ளது. வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

விவிஎஸ் லக்‌ஷ்மண்

மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதைத் தாண்டி, ஒரு சிறந்த மனிதராக ஷிகர் தவானை எனக்கு மிகவும் பிடிக்கும். அனைத்து சூழ்நிலைகளிலும் நேர்மறையாக இருப்பவர். உங்களது எதிர்கால பயணம் சிறக்க வாழ்த்துகள்.

வாசிம் ஜாஃபர்

மிகப் பெரிய தொடர்களில் சிறப்பாக விளையாடக் கூடியவர் ஷிகர் தவான். பெருமை அல்லது பாராட்டுகள் குறித்து அதிகம் கவலை கொள்ளாமல் அணியின் நலனுக்காக விளையாடுபவர். உங்களது இரண்டாவது இன்னிங்ஸுக்கு வாழ்த்துகள்.

சுரேஷ் ரெய்னா

ஷிகர் தவானின் கிரிக்கெட் பயணம் எண்ணற்ற சாதனைகளால் நிறைந்துள்ளது. அவருடன் இணைந்து கிரிக்கெட் விளையாடிய தருணங்கள் மறக்க முடியாதவை. உங்களது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

Trending News

Latest News

You May Like