இவர் தான் மிஸ் இந்தியா 2024 - உலக அழகி போட்டியில் பங்கேற்க வாய்ப்பு..!
மிஸ் இந்தியா 2024 பட்டத்தை மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த நிகிதா போர்வால் வென்றார். இவருக்கு கடந்த ஆண்டு வெற்றி பெற்ற நந்தினி குப்தா மற்றும் நேஹா தூபியா ஆகியோர் பட்டத்தை வழங்கி கௌரவித்தனர். டிவி தொப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய நிகிதா போர்வால், 60 திரையரங்க நாடகங்கள் மற்றும் 250க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் பங்கேற்றுள்ளார்.
மிஸ் இந்தியா பட்டம் பெற்ற நிகிதா போர்வால் பேசுகையில், “நான் எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளேன் என தனது வாழ்க்கையை திரும்பி பார்க்கையில், நான் மிகவும் வலிமை மிக்கவளாக உணர்கிறேன்” என கூறியுள்ளார். மேலும் அவருக்கு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை என கூறினார்.
இதனைத்தொடர்ந்து மிஸ் இந்தியா 2024 போட்டியில் ரேகா பாண்டே இரண்டாவது இடத்தையும், யுஷி டோலாக்கியா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மிஸ் இந்தியா பட்டம் வென்றுள்ள நிகிதா போர்வால், உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார்.