ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும்… ஆட்சியர் அதிரடி!!

மதுரையில் அதிகளவு பயணிகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை மாநகரில் பெர்மிட் பெற்று இயங்கும் ஷேர் ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றி செல்வது, விதிகளுக்கு மாறாக மாற்றி வாகனங்களை இயக்கும் பட்சத்தில் பெர்மிட் ரத்து செய்ய சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அரசு பேருந்துகளின் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்காணிக்க சிறப்பு குழு உருவாக்கப்பட்டு, அம்மாதிரி விதிமீறும் மாணவர்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகம், உணவு பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத்துறைக்கு தொடர்பான நுகர்வோர் அமைப்பினர் தெரிவித்த புகார்களின் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
newstm.in