தோஷம் போக்க திருப்பதியில் சாந்தி ஹோமம்!
திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லட்டு விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி உள்ளிட்டோருடன் முதல்வர் சந்திரபாபு ஆலோசனை நடத்தினார்.இதன் முடிவில் 3 நாட்கள் சாந்தி யாகம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இன்று காலைத் திருப்பதியில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் சாந்தி ஹோமம் காலை 6 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழுமலையான் கோயிலுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க யாகம் நடக்கிறது. மூன்று யாகக் குண்டங்கள் அமைத்து 8 வேத பண்டிதர்கள் கலந்து கொண்டு சிறப்பு ஹோமம் நடத்தி வருகின்றனர். முன்னதாக, கோவில் மடைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து இடங்களும் தூய்மை செய்யப்பட்டன.