சவுக்கு சங்கர் திடீர் பல்டி".. துன்புறுத்தப்படவில்லை என வாக்குமூலம்..!
பெண் போலீசார் குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்து சமூக வலைதளங்களில் பரவ விட்ட சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தேனி மாவட்ட காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமின் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
மனுவை விசாரித்த மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிபதி செங்கமலச் செல்வன், சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
2 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். போலீஸ் காவலில் நான் துன்புறுத்தப்படவில்லை என்று மதுரை நீதிமன்றத்தில் அஜரான சவுக்கு சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து,கஞ்சா வைத்திருந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டித்துள்ளனர்.