கேவலம் பிடிச்ச பொம்பளயாம்.. உன்னை மாதிரி துப்பு கெட்டவன் கூட வாழ்ந்தேன் பாரு - நடிகை விஜயலக்ஷ்மி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்க கூடிய சீமான், தன்னை ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவக்கம் காவல் நிலையத்தில் நடிகை ஒருவர் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையே, அந்த புகாரை நடிகை வாபஸ் பெற்றார். எனினும், சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யாமல் போலீசார் வைத்து இருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சீமானின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன், அவர் மீதான வழக்கை விசாரித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து, இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது.
வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், “என்ன பாலியல் குற்ற வழக்கு.. நிரூபிக்கப்பட்டு இருக்கா.. சேட்டை பண்னக்கூடாது.. திருமணம் என்ற ஒப்பந்தத்திற்குள்ளே போகல.. 6,7 மாதங்கள் தான் பழகியிருப்போம்.. அதன்பிறகு, 2008, 2009, 2010 கால கட்டங்களில் நான் தொடர்ச்சியாக சிறையில் தான் இருந்தேன். 2009 க்கு பிறகு தொடர்பு இல்லை” என்று காட்டமாக பேசினர்.
சீமானின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகை இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
என்னதான் அவளோட பிரச்சினை என்று பிரஸ்காரங்க கேள்வி கேக்கனுமாம்.. சீமான், 2023 ல் எதுக்கு நீ 50 ஆயிரம் போட்ட.. நீ என்னமோ பிள்ளைங்க வளர்ந்துடுச்சு.. அது வளர்ந்துடுச்சு.. இது வளர்ந்துடுச்சு.. அப்புறம் எதுக்குடா என்கிட்ட வீடியோஸ் வாங்கனீங்க.. எதுக்கு வீடியோஸ் வாங்குனீங்க.. நீ வாங்கி வைப்ப.. அப்புறம் நான் வாயை மூடிட்டு இருப்பேன். அப்புறம் உங்க ஆட்களே வந்து டெலிகாஸ்ட் பண்ணுவேன் என மிரட்டுவாங்க.. இதுக்குள்ளயே நான் வந்து சாகணுமா? நீ ஆம்பளயா இருந்தா அநாகரீகமாக பேசாத சீமான்.. 2008 ல இருந்து வெறும் 6 மாதம் தான் பழகினேனாம். அப்புறம் எதுக்குடா நான் 2011 ல் வந்து புகார் கொடுப்பேன். 2011-ல் நீங்க கொடுத்த டார்ச்சருக்குதான் நான் போட்ட துணியோட வந்து கமிஷனர் ஆபிசில் புகார் கொடுத்தேன். அசிங்கமாக பேசும் வேலையெல்லாம் வைத்துக்கொள்ளாதே.. நீ பேசினால் உன்னை விட கேவலமாக பேசுறதுக்கு எனக்கு தெரியும். சும்மா டிராமா போடாத..
நேற்று வரைக்கு என்ன சொல்லிட்டு இருந்த.. நடிகை யாருன்னே தெரியாது.. திமுக கூட்டிட்டு வந்தாங்கன்னுதான சொல்லிட்டு இருந்த.. நேற்று தான சொல்லுற.. ஆமா நான் 50 ஆயிரம் கொடுத்துட்டு இருந்தேன்னு.. எதுக்கு மதுரை செல்வம் என் கிட்ட வீடியோ வாங்கிட்டு இருந்தான். எதுக்கு 50 ஆயிரம் என் அக்கவுண்டில் போட்டீங்க.. மீடியா முன்னாடி சீன் போட்டுட்டு இருக்காத.. கேவலம் பிடிச்ச பொம்பளயாம்.. உன்னை மாதிரி துப்பு கெட்டவன் கூட வாழ்ந்தேன் பாரு.. எனக்கு தான் கேவலம்.. பெரிய ஆள் மாதிரி பேசாத. இவ்வாறு அவர் பேசினார்.