குடும்பத்தை காப்பாற்ற திருடிய இளம்பெண் - ஊதாரியாக கணவன் சுற்றியதால் அவலம் !

சென்னை பாடிகுப்பம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வட மாநில இளைஞர்கள் தங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களது அறையில் இருந்து 5 செல்போன்கள் மற்றும் 10 ஆயிரம் பணம் திருடு போனது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் தரப்பில் ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜெஜெ நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் வனிதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது சுமார் 20 வயதான இளம்பெண் ஒருவர் அறையில் திருடிய பொருட்களை கைப்பயில் வைத்து எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. ஆனால் பழைய குற்றவாளிகளின் பட்டியலில் அந்த இளம்பெண்ணின் புகைப்படம் இல்லாததால் அவரை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
ஆனால் தொழில்நுட்ப வழியில் அவரை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அதன்படி திருடப்பட்ட செல்போன்களின் ஐ.எம்.இ. நம்பரை வைத்து அந்த செல்போன் சிக்னலை கொண்டு விசாரணை நடத்தினர்.
அதன்படி செல்போன்கள் மற்றும் பணத்தை திருடிய அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திருமணமான வாசுகி என்பதும், அவரது கணவர் சரத் என்பதும் தெரியவந்தது.
கணவர் சரத் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக போதையில் ஒருவரை கத்தியால் வெட்டிய வழக்கில் சிறைக்கு சென்றதும் தெரியவந்தது. முன்னதாகவும் கணவர் குடித்துவிட்டு ஊதாரியாக சுத்தியதால் குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாமல் இருந்துள்ளார்.
இதனால் பெண்கள் விடுதி மற்றும் திறந்து இருக்கும் வீடுகளில் புகுந்து வாசுகி திருடி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. வாசுகி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in