1. Home
  2. தமிழ்நாடு

வைரலாகும் ஷாலினி போட்ட ட்வீட்! நண்பனை இழந்த சோகத்தில் அஜித்..

1

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின், கின்னார் மாவட்டத்தில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் சுற்றுலா சென்றபோது, காணாமல்போனார். மேலும், அவர் பயணித்த கார் பிப்ரவரி 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பாங்கி நல்லா அருகில் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது. அந்தச் சம்பவத்தில் கார் ஓட்டுநர் நீரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.அவரது பெயர் தன்ஜின் எனத் தெரிந்தது. மேலும் கோபிநாத் என்பவர், காயமடைந்த நிலையில் இருந்து மீட்கப்பட்டார்.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் 200 மீட்டர் ஆழத்தில் சட்லஜ் நதியில் விழுந்தது. காசாவில் இருந்து சிம்லாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் தனது மகன் வெற்றி துரைசாமியைக் கண்டுபிடிப்பவர்களுக்கு, ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிவித்து இருந்தார். இதனை கின்னார் துணை ஆணையர் அமித் குமார் சர்மாவும் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். துரைசாமியும் தனது மகனை கண்டுபிடிக்க உதவுமாறு உள்ளூர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விபத்தினைத் தொடர்ந்து தேடுதல் குழுக்கள் ஆற்றங்கரையில் ஒரு சடலத்தின் எச்சங்களை மீட்டுள்ளன. மேலும் அவை டி.என்.ஏ பிரித்தெடுத்தல் மற்றும் பகுப்பாய்வுக்காக ஜுங்காவில் உள்ள மாநில தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த எச்சங்கள் காணாமல் போனவருடையதாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அது டி.என்.ஏ.பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடலை 8 நாட்களுக்குப் பிறகு, நேற்றைய தினம் சட்லஜ் நதியில் இருந்து மீட்புப் படையினர் மீட்டர். பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக வெற்றியின் உடல் ரெகாங்புவாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.இதனையடுத்து வெற்றி துரைசாமியின் உடல், ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இன்று சென்னை கொண்டு வரப்படுகிறது.

சென்னை நந்தனம் சிஐடி நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் இன்று மாலை 5 மணி அளவில் வெற்றிதுரைசாமியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனவும், 6 மணி அளவில் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி எக்ஸ் வலைத்தளத்தில் வெற்றி துரைசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் வெற்றியின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் அவருடன் அஜித் இருக்கும் போட்டோவும் ட்ரெண்டிங்கில் உள்ளது. அஜீத்தின் அருமை நண்பர் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அஜீத் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், 2021 ஆம் ஆண்டு வெற்றி துரைசாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களுக்காகவும், சிறந்த சாகசங்களுக்காகவும் என பதிவிட்டிருந்த போட்டோவும் தற்போது வைரலாகி வருகிறது. அஜித்தின் ரசிகர்கள் பலரும் இணையத்தின் வாயிலாக வெற்றி துரைசாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


 

Trending News

Latest News

You May Like