1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் அஜித் கல கல பேச்சு : காலில் விழுந்த ஷாலினி; அஜித் கொடுத்த க்யூட் கமெண்ட்

1

இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் சேர்ந்து நடித்தபோது அஜித் குமார், ஷாலினி இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். அஜித்குமார்-ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

அண்மையில் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் கார் பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான பயிற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் புதிய படத்தில் நடிப்பதற்காக தன்னைத் தயார்படுத்தி வருகிறார். 

நடிகர் அஜித்குமார்-ஷாலினி தம்பதியரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவின் ஃபேவரைட் மற்றும் க்யூட் தம்பதிகளான நடிகர் அஜித் குமார் - நடிகை ஷாலினியின் சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வரலெட்சுமி விரதத்தின் போது கோயிலில் தனது கணவர் அஜித் குமார் காலில் விழுந்து ஷாலினி ஆசீர்வாதம் வாங்கினார். அப்போது அஜித், வீட்டுல போய் நான் விழணும் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார். இந்த க்யூட் வீடியோவை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like