1. Home
  2. தமிழ்நாடு

சைலேந்திரபாபுவை டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமித்ததை நிராகரித்த ஆளுநர்..!

1

தமிழக காவல்துறை டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திரபாபு, கடந்த ஜூன் மாதம் 30- ஆம் தேதி ஓய்வுப் பெற்றார். சைலேந்திரபாபுவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமித்த தமிழக அரசு, அது தொடர்பான கோப்புகளை ஆளுநர் மாளிகைக்கு ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது.

தொடர்ச்சியாக, சில விளக்கங்களைக் கேட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஆளுநர் ஆவணங்களைத் திருப்பி அனுப்பியிருந்தார். இதற்கு தமிழக அரசு விளக்கங்களை அளித்த நிலையில், அதில் திருப்தி இல்லை எனக் கூறி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துவிட்டார்.

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், வேறுவொருவரையும் தேர்வுச் செய்யவும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like