1. Home
  2. தமிழ்நாடு

அட்லீக்கு உருக்கமாக நன்றி சொன்ன ஷாருக்கான்..!

1

71-வது தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்தனர் அதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஷாருக்கான் 'ஜவான்' திரைப்படத்திற்காக வென்றுள்ளார். தனது 33 வருட சினிமா கெரியரில் ஷாருக்கான் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ஜவான் திரைப்படமே இவருக்கு முதல் தேசிய விருதை பெற்று தந்துள்ளது.

கடந்த 1992-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘Deewana’ இந்திப் படத்தின் மூலம் நடிகராக வெள்ளித்திரையில் அறிமுகமானார் ஷாருக்கான். இவர் நடிப்பில் வெளியான ‘தில் வாலே துல் ஹனியா லேஜாயேங்கே’ பெரும் வெற்றி பெற்று ஷாருக்கானுக்கு தனித்த அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது.

அதே நேரம் ஷாருக்கானின் நடிப்புக்கு தீனிப்போட்ட படங்கள் என்றால் குறிப்பாக ‘ Swades, Chak De! India, and My Name Is Khan ஆகிய படங்களை கூறலாம். ஷாருக்கான் நடித்த ‘ஜக் தே இந்தியா’ படத்துக்கு சிறந்த பிரபலமான படத்துக்கான தேசிய விருது கிடைத்தது. ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. அதில் ஷாருக்கானின் நடிப்பு கவனிக்கப்படாமல் போனது. அந்த ஆண்டு ‘தூம் 2’ படத்துக்காக ஹ்ருத்திக் ரோஷனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

2010-ம் ஆண்டு வெளியான ‘மை நேம் இஸ் கான்’ படத்தில் ஷாருக்கானின் நடிப்பு கவனிக்க வைத்தது. அந்த படத்துக்காக தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த ஆண்டு ‘Paa’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார் அமிதாப் பச்சன்.

ஒரு வழியாக இத்தனை ஆண்டுகள் காத்திருப்பின் பலனாக 71-வது தேசிய திரைப்பட விருது பட்டியலில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய 33 வருட சினிமா பயணத்தில் ஷாருக்கான் பெரும் முதல் தேசிய விருது என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஜவான் படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்த அட்லீக்கு நன்றி என கூறி ஷாருக்கான்  வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.


 

Trending News

Latest News

You May Like