மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... அரசுப்பள்ளி ஆசிரியர் கைது!!
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த தோகைமலை பொம்ம நாயக்கன்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மருதை (59) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 6, 7, 8ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பாடம் எடுத்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இவர் பள்ளி மாணவ, மாணவிகளை அடித்தும், கொச்சை வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்து, பாலியல் தொந்தரவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்ற ஆசிரியரிடம் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் மாணவிகளின் நிலையை எடுத்துக் கூறி புகார் தெரிவித்தனர். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மேரி லாரா சேசுராஜ் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து போலீஸார் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அதில் ஆசிரியர் மருதை குற்றம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் மருதையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
newstm.in