மகளுக்கு பாலியல் தொல்லை… போதையில் மிருகமாக மாறிய தந்தை!

மகளுக்கு பாலியல் தொல்லை… போதையில் மிருகமாக மாறிய தந்தை!

மகளுக்கு பாலியல் தொல்லை… போதையில் மிருகமாக மாறிய தந்தை!
X

போதையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த கூலித் தொழிலாளி பாண்டியன் என்பவர் தனது 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவரது மனைவி எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.

அதில், அவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் பிரச்னை செய்வதாகவும், கடந்த சில நாட்களாக தான் வீட்டில் இல்லாத நேரத்தில் மகளை பாலியல் ரீதியில் சீண்டி வருகிறார் என கூறியிருந்தார்.

இதனால் தானும், தனது மகளும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதனால் தனது கணவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து அனைத்து மகளிர் போலீசார் பாண்டியனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் மது போதையில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it