உடல் நலம் பாதித்த பெண்ணுக்கு 5 மாதமாக பாலியல் தொல்லை!

உடல் நலம் பாதித்த பெண்ணுக்கு 5 மாதமாக பாலியல் தொல்லை!

உடல் நலம் பாதித்த பெண்ணுக்கு 5 மாதமாக பாலியல் தொல்லை!
X

உடல் நலம் பாதித்த தனக்கு வீட்டுக்கு அருகில் வசிக்கும் இரண்டு இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுப்பதாக இளம்பெண் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை பூஞ்சோலை பகுதியை சேர்ந்த ஜோசப்அன்னமேரி தம்பதி வயல்வெளியில் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இவருடைய மகள் பிரியா (26). பெங்களூரில் ஹோம் நர்சிங் துறையில் பணியாற்றி வந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி கடந்த 7 மாதங்களாக பூஞ்சோலை பகுதியில் தன்னுடைய வீட்டில் அவர் வசித்து வருகிறார். இவர் சிறுநீரகம் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த செங்கோடன் - மல்லிகா ஆகியோரின் மகன்களான பரத் மற்றும் சின்னண்ணன் (28) ஆகியோர் இவர்களின் இடத்தை அபகரித்து பாதையினையும் அபகரித்துள்ளனர். இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சின்னண்ணன் பிரியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் கையை கடித்து பாலியல் தொல்லையும் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ப்ரியா தனக்கு தொல்லை தருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி டி..ஜி ஆனி விஜயாவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

newstm.in

Next Story
Share it