தாயாருடன் மருத்துவமனை சென்ற இளம் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை... மத போதகர் கைது !

கேரளாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மக்கள் ஒத்துழைப்பு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் இந்த கொரோனா காலத்திலும் ஒருசில இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இடுக்கி மாவட்டம் அடிமாலி கல்லார் குட்டியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரின் தாயார் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அப்பெண் தனது தாயாரை அழைத்துக் கொண்டு, அங்குள்ள பாலக்காடான் ஆயுர்வேதா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
இந்த ஆயுர்வேத மருத்துவமனையை மத போதகர் ரெஜி என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு தாயாருக்கு சிகிச்சை அளித்துவிட்டு சிறிது ஓய்வு எடுக்கவேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது.
பின்னர் தாயாருடன் துணைக்கு வந்த 22 வயது இளம்பெண்ணை மருத்துவமனையின் ஒரு அறையில் வைத்து மிரட்டி மத போதகர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
எனினும் தாயாருடன் வீடு திரும்பிய அப்பெண் தனக்கு நடந்த கொடூரம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் மத போதகர் ரெஜியை பிடித்து விசாரித்தனர்.
அப்போது இளம்பெண்ணிற்கு பாலியல் கொடூரம் அளித்ததை உறுதி செய்த போலீசார் ரெஜியை கைது செய்து தொடுபுழா சிறையில் அடைத்தனர்.
newstm.in